» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சினிமா படப்பிடிப்பு தொடங்க அனுமதி வழங்கப்படுமா? - அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்

சனி 23, மே 2020 7:48:29 AM (IST)

ஆந்திர மாநிலத்தில் சினிமா படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டு போன்று தமிழகத்தில் அனுமதி வழங்க ஆலோசனை நடத்தப்படுகிறது. என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அவர் அளித்த பேட்டி: கரோனா வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் தங்களை தனிமைப்படுத்தி கொள்வது மிகவும் அவசியமானது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசு தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து வாகனங்களில் வருகிறவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை நடத்துவதற்கு, மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் தெர்மல் ஸ்கேனர் கருவி பொருத்தப்படுகிறது.

சின்னத்திரை படப்பிடிப்பு தொடங்குவதற்கு சில நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்பட்டு உள்ளது. அதேபோன்று சினிமா படப்பிடிப்பு தொடங்குவதற்கும் அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக சூழ்நிலையை கருத்தில் கொண்டு விரைவில் ஆலோசிப்பதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் சினிமா படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதேபோன்று இங்குள்ள சூழ்நிலை, தொற்று பாதிப்பு, ஊரடங்கு மற்றும் அனுமதி வழங்கினால் எத்தனை பேரை பணியாற்ற அனுமதிப்பது? குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. அதன் பின்னர் முடிவு செய்யப்படும்.

திரையரங்குகளை மீண்டும் திறப்பது தொடர்பாக திரையரங்கு உரிமையாளர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து முதல்-அமைச்சர் உரிய நேரத்தில் முடிவு செய்வார். தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து நீர்நிலைகளும் குடிமராமத்து பணிகள் மூலமாக தூர்வாரப்படும். இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Anbu Communications
Thoothukudi Business Directory