» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வழக்கு விவகாரத்தில் விவசாயி மீது தாக்குதல் : ஒருவருக்கு வலை

வெள்ளி 22, மே 2020 6:51:02 PM (IST)

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் விவசாயியை தாக்கிய மற்றொரு விவசாயியை போலீசார் தேடி வருகின்றனர்.

நாசரேத் அருகே உள்ள முதலைமொழியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (53). விவசாயி. இவரும் அதே ஊரைச் சேர்ந்த கோயில்ராஜ் என்பவரும் நண்பர்களாம். கோயில்ராஜிக்கும், அதே ஊரைச்சேர்ந்த இம்மானுவேல் (46) என்பவருக்கும் முன் விரோதத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறதாம். இந்நிலையில் சோமசுந்தரம், நாசரேத் சந்தி கடை வீதி பகுதியில்  நின்றபோது அங்கு வந்த இம்மானுவேல், அவரிடம் கோயில்ராஜிக்கும், தனக்கும் வழக்கை முடிவுக்கு கொண்டு வர அவரை வழக்கை வாபஸ் வாங்கிட கூறுமாறு , சோமசுந்தரிடம் தெரிவித்தாராம்.

இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில் மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் இம்மானுவேல், சோமசுந்தரத்தை  தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் நாசரேத் உதவி ஆய்வாளர் தங்கேஸ்வரன் வழக்குபதிந்து இம்மானுவேலை தேடி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD

Black Forest Cakes


Anbu Communications






Thoothukudi Business Directory