» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஹோட்டல் உரிமையாளர்கள் முடிவு குறித்த அறிவிப்பு : வேகமாக ஷேர் செய்யும் உணவு பிரியர்கள்

வெள்ளி 22, மே 2020 6:32:41 PM (IST)


ஊரடங்கிற்கு பின் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தூத்துக்குடியிலுள்ள ஹோட்டல் உரிமையாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த அறிவிப்பை உணவு பிரியர்கள்  ஷேர் செய்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக 4ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பல தரப்பட்ட தொழில்களுக்கும் தளர்வு அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க தூத்துக்குடி நகரிலுள்ள ஹோட்டல் உரிமையாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஊரடங்கிற்கு பின் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் அதன்படி ஊரடங்கு முடிந்த பின்னர் ஹோட்டல் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ், இன்சென்டிவ் கிடையாது எனவும் பணியாளர்களை 40 சதவீதம் அளவிற்கு குறைக்க வேண்டுமென முடிவெடுத்திருப்பதாகவும் தெரிகிறது.ஆனால் இதை சில ஹோட்டல் உரிமையாளர்கள் விரும்பவில்லை. மேலும் இந்த முடிவுகள் அடங்கிய அறிவிப்பையும் ஹாேட்டல் உரிமையாளர் ஒருவர் போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த உணவு பிரியர்கள் வேகமாக ஷேர் செய்து வருகின்றனர்.

இது குறித்து ஹாேட்டல் உரிமையாளர் ஒருவர் கூறும் போது, ஊரடங்கில் தற்போது தளர்வுகள் தான் வழங்கப்பட்டுள்ளதே தவிர இன்னமும் ஊரடங்கு முழுமையாக விலக்கப்படவில்லை. ஊரடங்கினால் தொழிலாளர்கள், ஏழை எளியோர் கடும் பணத்தட்டுப்பாட்டில் உள்ளனர். தீபாவளிக்கு இன்னும் 6 மாதங்கள் இருக்க அதற்குள்ளாகவே ஹோட்டல் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் கிடையாது என முடிவெடுக்க வேண்டிய அவசரம் என்ன ? என கேள்வி எழுப்பினார். மேலும் தற்போதைய நிலையில் தான் பணியாளர்கள், தாெழிலாளர்களுக்கு முடிந்த வரை உதவ வேண்டும். எனவே இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications


Black Forest Cakes


Friends Track CALL TAXI & CAB (P) LTD






Thoothukudi Business Directory