» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நினைவு தினம்: சிபிஎம் சார்பில் அஞ்சலி

வெள்ளி 22, மே 2020 4:54:27 PM (IST)தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் 2ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சிபிஎம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது .

தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பொதுமக்கள் அனைவரும் பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க சென்றபோது காவல்துறை நடத்திய துப்பாக்கிசூடு, மற்றும் தடியடியால் 15 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்,ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் 2ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு தூத்துக்குடியின் பல்வேறு இடங்களில் இன்று நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. 

ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் வீடுகளில் அவர்களது உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். சிபிஎம் தூத்துக்குடி மாவட்டக்குழு அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற நினைவு அஞ்சலி கூட்டத்தில் மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரசல், பேச்சிமுத்து, மாநகர் செயலாளர் தா.ராஜா, புறநகர் செயலாளர் பா.ராஜா, ஒன்றிய செயலாளர் சங்கரன், புவிராஜ், நம்பிராஜன், ரவிச்சந்திரன், மாவட்டக்குழு உறுப்ப்பினர்கள் குமாரவேல், பொன்ராஜ், வாலிபர் சங்க செயலாளர் முத்து, மாதர் சங்க மாவட்ட செயலாளர் பூமயில், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஜாய்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Anbu CommunicationsFriends Track CALL TAXI & CAB (P) LTD

Thoothukudi Business Directory