» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கரோனா நிலவரம் : தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப்நந்தூரி பேட்டி

வியாழன் 21, மே 2020 1:31:52 PM (IST)

வெளி மாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப இந்த வாரம் 3 ரயில்கள் செல்கிறது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும் போது, தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று வரை 113 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் இறந்தவர்கள் 2 பேர். 34 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தற்போது 77 பேருக்கு  கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மஹாராஷ்டிரா, குஜராத் போன்ற வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்களை தனிமைப்படுத்தி தீவிரமாக கண்காணித்து வருகிறோம். அவர்களால் பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னையிலிருந்தும் அதிகமானோர் தூத்துக்குடி வந்துள்ளனர்.  மாவட்டத்தில் 15 செக்போஸ்ட்கள் அமைக்கப்பட்டு அங்கு வருபவர்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். மஹாராஷ்டிராவிலிருந்து வந்தவர்களால் அதிகமான பாதிப்பு உள்ளது.

மாவட்டத்தில் 13 தனிமைப்படுத்தபட்ட பகுதிகள் உள்ளது. இங்கு தினசரி கிருமிநாசினி தெளிப்பு, வீடு வீடாக சோதனை நடைபெற்றது. 1494 பேர் பிற மாநிலங்களிலிருந்து தூத்துக்குடி வந்துள்ளனர். இன்னும் வந்து கொண்டேயிருக்கின்றனர். இதுவரை 1919 வெளி மாநில தொழிலாளர்கள் அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பஞ்சாப், ஹரியானா மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களை அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வாரத்தில் மட்டும் அவர்களை அனுப்ப 3 ரயில்கள் செல்கிறது. 

தமிழகஅரசு உத்தரவுப்படி ஊரடங்கு தளர்வு தூத்துக்குடி மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. கட்டுமான பணிகள், சாலை பணிகள், குடி மராமத்து பணிகள் இந்த வாரத்தில் தொடங்கும். கொழும்புவிலிருந்து தூத்துக்குடிக்கு கப்பல் வருவதற்கான முழு விபரங்கள் இன்னும் வரவில்லை. வந்த பின்னர் அது குறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். தூத்துக்குடி துப்பாக்கி சூடு நினைவு தினம் நாளை அனுசரிக்கப்பட உள்ளது. ஏற்கனவே ஊரடங்கு அமலில் உள்ளதால் யாரும் பொது இடங்களில் கூட அனுமதி இல்லை. மாவட்டம் முழுவதும் ஆயிரம் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து

k.rajaமே 21, 2020 - 02:42:11 PM | Posted IP 162.1*****

muthunayakarstreetthaniami house person goingto velavanhyperjob noaction

R. Rajமே 21, 2020 - 01:53:53 PM | Posted IP 162.1*****

திரேஸ்புரம் மீன் சந்தை, ஹார்பர் பீச் மீன் சந்தை, இனிகோ நகர் மீன் சந்தை போன்ற இடத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. எவ்வித பாதுகாப்பு உபகரணம் மற்றும் 1மீட்டர் இடைவெளி இல்லாமல் இருப்பதால் கொரானா குடியிருக்க வாய்ப்பு உள்ளது. கலெக்ட்ர் சார் நடவடிக்கை எடுங்க.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications


Black Forest Cakes

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Thoothukudi Business Directory