» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி நகரில் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி : முக்கிய சாலை மூடல்

வியாழன் 21, மே 2020 10:22:14 AM (IST)தூத்துக்குடி நகர்ப்பகுதியில் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து முக்கிய சாலை மூடப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி இன்னாசியார்புரம் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பங்குதந்தை ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.  அப்பகுதியில் உள்ள பிரதான சாலையான சேதுபாதை ரோடு, அமெரிக்கன் ஆஸ்பத்திரி சந்திப்பிலிருந்து டிஎஸ்எப் மீன் கம்பெனி வரை சாலைகள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. அப்பகுதியில் வேறு நபர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல சுகாதார ஆய்வாளர் ஹரிகணேஷ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த பகுதி மக்களுடம் கரோனா விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதி மக்கள் வெளிய செல்லக்கூடாது என்று அறிவுறுத்தினர். மேலும் அப்பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாநகர் பகுதியில் நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து

makkalமே 22, 2020 - 04:01:35 PM | Posted IP 173.2*****

ஹைப்பர் மூலமா பரவுதா?

EsakkiMuthuமே 21, 2020 - 10:44:07 PM | Posted IP 108.1*****

S.R

Wm. Antonysamyமே 21, 2020 - 09:18:55 PM | Posted IP 173.2*****

Iyya avarukku eppadi korana vanthatu enpathai ariyamal ippadi Ella makkalum imsai paduthurangala bh

K.S.Rajaமே 21, 2020 - 12:44:46 PM | Posted IP 108.1*****

"எண்ணத்த சொல்ல"

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD


Anbu Communications

Black Forest CakesThoothukudi Business Directory