» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 91பேருக்கு கரோனா வைரஸ் சிகிச்சை!

வியாழன் 21, மே 2020 8:38:39 AM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 91 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 127ஆக உயர்ந்து உள்ளது. இதில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 29 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். 2 பேர் இறந்து விட்டனர். இந்த நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கோவில்பட்டியை சேர்ந்த 5 பேர் நேற்று முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினர். இன்று காலை 7 மணி நிலவரப்படி தற்போது 91பேருக்கு  தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மராட்டிய மாநிலத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கயத்தாறு, ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம் ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்காக வந்தவர்களை சோதனைச்சாவடியில் அதிகாரிகள் மடக்கி முகாமில் தங்க வைத்தனர். தொடர்ந்து அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3 மாத கைக்குழந்தை உள்பட 21 பேருக்கும், கோவில்பட்டியை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் 23 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்து உள்ளது.


மக்கள் கருத்து

DURAI PANDIANமே 21, 2020 - 10:41:51 AM | Posted IP 173.2*****

கொரோனா பாதிப்பு குறைவாக இருக்கும் சமயத்தில் மக்கள் வெளிய வருவதற்கு நிறைய விதிமுறைகள் இருந்தது. ஆனால் தற்போது பாதிப்பு அதிகமாக இருக்கும் போது மக்கள் சாதாரணமாக வெளியே சுற்றுகிறார்கள். கவனமாக இருப்பது நம் கையில் தான் உள்ளது

Kalairajanமே 21, 2020 - 08:45:41 AM | Posted IP 162.1*****

உள்ளூர் மக்கள் ஏதும் பாதித்துள்ளார்களா. எல்லாம் திறந்து விடப்படுகிறது?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu CommunicationsFriends Track CALL TAXI & CAB (P) LTD


Black Forest Cakes
Thoothukudi Business Directory