» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கையில் கம்புகளுடன் செயல்படும் தன்னார்வலர்கள்! மாவட்ட எஸ்.பி. நடவடிக்கை எடுப்பாரா?

ஞாயிறு 5, ஏப்ரல் 2020 6:51:38 PM (IST)

தன்னார்வலர்கள் என்ற பெயரில் கையில் கம்புகளுடன் செயல்படும் நபர்கள் மீது மாவட்ட எஸ்.பி. நடவடிக்கை எடுப்பாரா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழக அரசு எடுத்து வரும் அனைத்து முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் விதமாக தன்னார்வலர்களும் களத்தில் இறங்கி சேவையாற்றி வருகின்றனர். இதற்காக, தூத்துக்குடி மாவட்ட பகுதியில் பல்வேறு உதவிப் பணிகளை தன்னார்வலர்கள் செய்து வருகின்றனர். குறிப்பாக, தற்போதைய சவாலான சூழலில் இரவு பகலாக சேவையாற்றி வரும் மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், காவல் துறையினர்கள் ஆகியோர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை தன்னார்வலர்களும் செய்து வருகின்றனர்.

ஆனால் நாசரேத் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட இடங்களில் செயல்பட்டுவரும் தன்னார்வலர்கள் கையில் இடுப்பு அளவு கம்பை வைத்துக் கொண்டு பொதுமக்களை மிரட்டுவது பொது மக்கள் மத்தியில் கொரோனா வைரஸ் தாக்கத்தில் காவல்துறையினர் செய்து வரும் சீரிய பணிகளை புறம்தள்ளி விடுகிறது. எனவே தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாசரேத் சுற்று வட்டார மக்கள் விரும்புகின்றனர்.


மக்கள் கருத்து

TuticorianApr 7, 2020 - 03:02:14 PM | Posted IP 173.2*****

SP must ensure that police on duty must wear uniform otherwise people won't differentiate between them and anti-social elements. It can lead to serious consequences. Will SP take action?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsFriends Track CALL TAXI & CAB (P) LTD

Black Forest Cakes


Anbu Communications
Thoothukudi Business Directory