» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பள்ளிவாசலில் தூய்மைப் பணியாளர்களுக்கு உதவி

ஞாயிறு 5, ஏப்ரல் 2020 4:43:40 PM (IST)செய்துங்கநல்லூரில் பள்ளிவாசலில் வைத்து தூய்மைப் பணியாளர்கள் குடும்பத்துக்கு உணவு பொருள்கள் வழங்கப்பட்டது.

உலகை ஆட்டிப்படைக்கும் கரொனா வைரஸ் காரணமாக இந்தியாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கரோனா வைரஸின் அபாயத்தில் நாடே முடக்கப்பட்டுள்ள நிலையில் செய்துங்கநல்லூரை சேர்ந்த பல்வேறு மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் உள்ளனர். இதனால் அவர்களுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் செய்துங்கநல்லூர் பைத்துல்மால் மூலமாக பஞ்சாயத்து துப்புரவு தொழிலாளர்கள் 10 குடும்பங்களுக்கு ரூ.500 மதிப்பிலான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த பொருள்களை பைத்துல்மால் கௌரவ ஆலோசகர் சாகுல் ஹமீது வழங்கினார். இதில் பைத்துல்மாலின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications


Black Forest CakesFriends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory