» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கிளாக்குளத்தில் கிராம மக்கள் அமைத்த செக்போஸ்ட் : வெளியூர் நபர்களுக்கு அனுமதியில்லை

ஞாயிறு 5, ஏப்ரல் 2020 4:36:00 PM (IST)



கருங்குளம் அருகே கிளாக்குளத்தில் கிராம மக்கள் வெளியூரில் இருந்து யாரும் வரக்கூடாது என செக்போஸ்ட் அமைத்து உள்ளனர்.

கொரானா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறது. அதில் கிராம மக்களும் தங்களது பங்குக்கு இணங்க ஏற்பாடு செய்துவருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் அருகே உள்ள கிளாக்குளம் கிராமத்தில் ஊரின் இரு புறமும் செக்போஸ்ட் அமைத்துள்ளனர். இதை ஊர் இளைஞர்கள் முறை வைத்து இதை கண்காணித்து வருகின்றனர். 

வெளியூரில் இருந்து யாரும் ஊருக்கு வர அனுமதி கிடையாது . உள்ளூர் மக்கள் வெளியூர் சென்று விட்டு வந்தால் அவர்கள் கைகழுவி விட்டுத்தான் உள்ளே நுழைய வேண்டும் அதற்கான ஏற்பாடுகளை செக்போஸ்ட் அருகே தண்ணீர் கிருமி நாசினி போன்றவற்றை ஏற்பாடு செய்துள்ளனர். இதில் ஊர் பிரமுகர்கள் பெரியசாமி, கண்ணன், கணேசன், ஜெபமணி, கணபதி முருகன், உள்பட இளைஞர்கள் கண்காணித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD

Anbu Communications

Black Forest Cakes






Thoothukudi Business Directory