» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 744 மது பாட்டில்கள் பறிமுதல் : லாட்ஜ் உரிமையாளர் கைது

ஞாயிறு 5, ஏப்ரல் 2020 12:05:10 PM (IST)

தூத்துக்குடியில் 144 தடையுத்தரவை மீறி மதுபானங்கள் விற்பனை செய்ததாக தனியார் லாட்ஜ் உரிமையாளர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாடு முழுவதும் தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் மதுபான விற்பனை முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. அதை மீறி மதுபானங்கள் விற்பவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தூத்துக்குடி எட்டயபுரம் ரோடு 3ம் கேட் மேம்பாலம் கீழே உள்ள ஒரு லாட்ஜில் 144 தடையுத்தரவை மீறி மதுபானங்கள் விற்பனை செய்வதாக மத்தியபாகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அங்கு ஒரு சாக்குபையில் இருந்த 744 மதுபான பாட்டில்கள்களையும், மதுபானம் விற்ற பணம் ரூ. 2 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர். இது சம்பந்தமாக லாட்ஜ் உரிமையாளர் திலக் சந்திரன் (73), பாட்டிலை விற்று கொண்டிருந்த கன்னியாமுத்து (40) ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications


Friends Track CALL TAXI & CAB (P) LTD


Black Forest Cakes




Thoothukudi Business Directory