» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண் டாக்டர் குழந்தைகளுடன் கொரோனா வார்டில் அனுமதி : தூத்துக்குடியில் பரபரப்பு

ஞாயிறு 5, ஏப்ரல் 2020 11:53:57 AM (IST)

காயல்பட்டணத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அனைவரும் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காயல்பட்டணத்தை சேர்ந்த ஒருவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர் என தெரிய வந்துள்ளது. இந்நிலையில் அவரது மனைவியான பெண் டாக்டர், மற்றும் அவர்களது 3 சிறு குழந்தைகள், பெண் டாக்டரின் மாமியார் உட்பட 5 பேர் இன்று காலை கடுமையான சளி மற்றும் இருமலுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டனர். அவர்களது மாதிரி எடுக்கப்பட்டு நெல்லையிலுள்ள கொரோனா ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. 

சோதனை முடிவுகளுக்கு பிறகே அவர்களுக்கு கொரோனோ தொற்று உள்ளதா இல்லையா என தெரியவரும். ஏற்கனவே காயல்பட்டணம் பகுதி தனிமைப்படுத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு குடும்பமே கொரோனா அறிகுறியுடன் அனுமதி க்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து

கேட்ச்Apr 5, 2020 - 04:32:04 PM | Posted IP 162.1*****

அன்பான தமிழ் சொந்தங்களே எந்த வித அச்சமும் இன்றி முன்வந்து பரிசோதனை செய்யுங்கள், நம் சகோதர சகோதரிகளை காக்க முன் வாருங்கள். வரும் முன் காப்பது நன்று.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications

Black Forest CakesFriends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory