» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மார்க்கெட்டில் காய்கறி வாங்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு!!

வியாழன் 26, மார்ச் 2020 11:46:37 AM (IST)தூத்துக்குடி மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்குவதற்காக, பொதுமக்கள் குறிப்பிட்ட இடைவெளியில் நீண்ட வரிசையில காத்திருந்தனர். 

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 144 தடை உத்தரவும், ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் அருகேயுள்ள காமராஜா் காய்கறி மார்க்கெட்டில் நேற்று  காய்கறிகள் வாங்க  மக்கள் கூட்டம் அதிகமானதால் மார்க்கெட் மூடப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணிக்கு மார்க்கெட்டில் விற்பனை தொடங்கியது. இங்கு மொத்தமாக கூடுவதை தவிர்க்க ஒவ்வொரு நபருக்கும் இடையே 3 மீட்டர் இடைவெளி இருக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் வட்டமிடப்பட்டு இருந்தது.  

பொதுமக்கள் வட்டத்துக்குள் நின்று நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மேலும் மார்க்கெட்டுக்குள் குறிப்பிட்ட நேரமே இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி இருந்தனர். ஆனால் மார்க்கெட்டுக்குள் போதிய இடைவெளியின்றி மக்கள் நெருக்கமாக நின்றனர். இதையடுத்து குறிப்பிட்ட இடைவெளியில் நிற்குமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக மார்க்கெட்டில் காய்கறிகள், பொருட்கள் வாங்க வந்தவர்களுக்கு சோப்பு ஆயில் கொடுத்து கைகளை கழுவும்படி மாநகராட்சி ஊழியர்கள் அறிவுறுத்தினர். மத்திய பாகம் காவல் ஆய்வாளர் ஜெயிரகாஷ், உதவி ஆய்வாளர் ஜெயசித்ரா மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  

வாகனங்கள் கண்காணிப்பு 

தூத்துக்குடியில் பிரதான சாலைகள் மூடப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பணிகளுக்கு செல்ல மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டூவீலர்களின் வருபவர்களை போலீசார் தொடர்ந்து கண்காணித்து, தேவையில்லாமல் வெளியே சுற்ற வேண்டாம் என்று கூறி எச்சரித்து வருகின்றனர். சில இடங்களில் அடிக்கடி செல்லும் வாகனங்களின் பதிவெண்களை போலீசார் குறித்து வைத்துக் கொண்டனர். தொடர்ந்து அந்த வாகனங்கள் நடமாட்டம் தெரிந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory