» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சட்ட விரோதமாக கள் விற்பனை: 2பேர் கைது

வியாழன் 26, மார்ச் 2020 11:19:32 AM (IST)

கோவில்பட்டி பகுதியில் சட்ட விரோதமாக மோட்டார் சைக்கிள்களில் "கள்" கொண்டு வந்த 2பேரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியில் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரவேல் மற்றும் போலீசார் சிதம்பரம்பட்டி பஸ் ஸ்டாப் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டபோது. மோட்டார் சைக்கிளில் வந்த நபரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, அவர் வைத்திருந்த கேனில் 18 லிட்டர் "கள்" இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த நபர் சட்ட விரோதமாக "கள்" விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. 

இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த தென்காசி மாவட்டம், ராமநாதபுரம் கிராமம், காமராஜ் நகரைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் காடல்கனி (55) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதுபோல் மற்றொரு மோட்டார் சைக்கிளில் 12 லிட்டர் "கள்" வைத்திருந்த தென்காசி மாவட்டம், ராமநாதபுரம் கிராமம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த முத்தையா மகன் பெரியசாமி (53) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

சேகர தலைவரை தாக்கிய முன்னாள் ஊழியர் கைது

புதன் 30, செப்டம்பர் 2020 11:02:19 AM (IST)

Sponsored Ads

Anbu Communications


Black Forest Cakes







Thoothukudi Business Directory