» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

செமஸ்டர் தேர்வில் தோல்வி: மாணவர் தற்கொலை

வியாழன் 26, மார்ச் 2020 10:46:33 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே செமஸ்டர் தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள பசுவந்தனை மேலமங்கலம் கிராமம், தெற்கு தெருவைச் சேர்ந்தவர் செல்வம் மகன் ராஜலிங்கம் (21). இவர் தூத்துக்குடி கோரம்பள்ளம் அரசு ஐடிஐ-யில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். சமீபத்தில் நடந்த செமஸ்டர் தேர்வில் 2 பாடங்களில் அவர் தேர்ச்சிபெறவில்லையாம். இதனால் அவரது தந்தை திட்டியுள்ளார். இதில் மனவேதனையடைந்த ராஜலிங்கம், நேற்று தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பசுவந்தனை போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமொழி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

குடும்பத் தகராறில் பெண் தற்கொலை!

திருச்செந்தூர் அருகே கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள கந்தசாமிபுரத்தைச் சேர்ந்தவர்  ஜெயசிங் மனைவி தங்கலெட்சுமி (45). இவருக்கு கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதில் ஏற்பட்ட தகராறில் மனவேதனையடைந்த தங்கலெட்சுமி நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருச்செந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

சேகர தலைவரை தாக்கிய முன்னாள் ஊழியர் கைது

புதன் 30, செப்டம்பர் 2020 11:02:19 AM (IST)

Sponsored Ads

Anbu Communications



Black Forest Cakes






Thoothukudi Business Directory