» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

துறைமுகத்திலிருந்து செல்லும் வாகனங்களுக்கு விலக்கு : தூத்துக்குடி ஆட்சியருக்கு கோரிக்கை மனு

வியாழன் 26, மார்ச் 2020 10:16:06 AM (IST)

துறைமுகத்தில் இருந்து சரக்கு ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு 144 தடையுத்தரவிலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென தூத்துக்குடி மாவட்டஆட்சியருக்கு  வஉசி துறைமுக நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது

தற்போது உலகையே கராேனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு முடக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும் தமிழகத்திலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு வஉசி துறைமுக நிர்வாகம் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில்கூறியுள்ளதாவது, தற்போது கராேனா  வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த 24ஆம் தேதி மாலை முதல் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அமைச்சரவை கூறி உள்ளது.

எனவே தாங்கள் தூத்துக்குடியிலிருந்து அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கும் துறைமுகத்திலிருந்து பொருட்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள், டிரக்குகள்,டெம்போக்கள் ஆகியவற்றிற்கு தடையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். மேலும் வஉசி துறைமுகம் சார்பில் துறைமுக பகுதிகளில் கரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

PonrajMar 28, 2020 - 02:45:04 AM | Posted IP 162.1*****

Please port close panunka.inka onum safety Ila Nan ipa port la than work panren .please stop port operation.save our life . please take immediate action

AntonyMar 27, 2020 - 09:05:38 PM | Posted IP 108.1*****

Intha mathiri vilakku ellathukkum kudutha epadi coronavirus control pannamudium. Seafood company la work vara solluvanga sir, so complete lock

RajaMar 26, 2020 - 11:04:15 AM | Posted IP 108.1*****

First shut the port operation, after they do not ask this special relaxation on this 144, request all to stay at home for 21 days obey the government order .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

சேகர தலைவரை தாக்கிய முன்னாள் ஊழியர் கைது

புதன் 30, செப்டம்பர் 2020 11:02:19 AM (IST)

Sponsored Ads
Anbu CommunicationsBlack Forest CakesThoothukudi Business Directory