» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மத்திய, மாநில அரசுகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்: மோகன் சி.லாசரஸ் வலியுறுத்தல்

வியாழன் 26, மார்ச் 2020 9:20:52 AM (IST)

கரோனோ வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழிய நிறுவனர் மோகன் சி.லாசரஸ் கூறினார்.

இதுகுறித்து அவா் நேற்று வெளியிட்ட அறிக்கை: நாட்டில் கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. கரோனா வைரஸ் பரவுதலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 

அதன்படி, அரசு ஊரடங்கு அறிவித்துள்ள 21 நாள்களும் நம்மை தனிமைப்படுத்திக் கொண்டு, தேவையில்லாமல் வீட்டில் இருந்து வெளியேறுவதை தவிா்க்க வேண்டும். குடும்பத்தினரோடு செலவு செய்ய கடவுள் கொடுத்த தருணமாக இதை கருதுவோம் என்று மோகன் சி.லாசரஸ் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Friends Track CALL TAXI & CAB (P) LTD




Anbu Communications



Thoothukudi Business Directory