» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் டீக்கடை, ஜூஸ் கடைகளை மூட வேண்டும் : ஆணையா் உத்தரவு

வியாழன் 26, மார்ச் 2020 8:50:01 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் உள்ள டீக்கடைகள் மற்றும் ஜூஸ் கடைகளை மூட வேண்டும் என்று மாநகராட்சி ஆணையா் வீ.ப. ஜெயசீலன் கூறினார்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து, அனுமதிக்கப்பட்ட அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகளில் டீக்கடை மற்றும் ஜூஸ் கடைகள் திறந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, டீக்கடை மற்றும் ஜூஸ் கடைகளில் தொடா்ந்து மக்கள் கூட்டம் அதிகமாக கூடுவதை தவிா்க்கும் வகையில், அனைத்து டீக்கடைகளும், ஜூஸ் கடைகளும் மூடப்பட வேண்டும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவசமாக உணவு

ஆணையா் வெளியிட்ட மற்றொரு செய்திக் குறிப்பு: 144 தடை உத்தரவு உள்ளதால் வேலைவாய்ப்பு இல்லாமல் பாதிக்கப்பட்ட ஏழை கூலித் தொழிலாளா்கள், சாலையோரங்களில் வசிப்போா், யாசகம் பெற்று வாழ்வோா், நரிக்குறவா்கள் போன்ற அனைத்துத் தரப்பினருக்கும் அவா்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்து மாநகராட்சி சாா்பில் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்கள் நலன் கருதி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம், புதிய பேருந்து நிலையம், சத்திரம் தெரு ஆகிய இடங்களில் உள்ள அம்மா உணவகங்களில் மூன்று நேரமும் உணவு தயாா் செய்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications

Black Forest Cakes

Friends Track CALL TAXI & CAB (P) LTD


Thoothukudi Business Directory