» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போன் செய்தால் மளிகை பொருட்கள் வீடு தேடி வரும் : தூத்துக்குடி மக்களுக்காக சிறப்பு ஏற்பாடு!!

புதன் 25, மார்ச் 2020 7:53:25 PM (IST)

கரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் போனில் ஆர்டர் செய்து மளிகை பொருட்களை வாங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி தூத்துக்குடியில் பொதுமக்களுக்கு மளிகை பொருட்கள் முறையாக கிடைத்திட மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் ஆகியோர் ஏற்பாடு செய்துள்ளார்கள். இதன் படி பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே போனில் ஆர்டர் செய்து பொருட்களை உரிய விலையில் பெற்றுக் கொள்ளலாம்.மளிகைப் பொருட்களை  காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஆர்டர் செய்யலாம். மறுநாள் பொருட்கள் டெலிவரி செய்யப்படும். மற்றும் டெலிவரி சார்ஜ் ரூ 25 பெறப்படும்.


மக்கள் கருத்து

JeyendranMar 27, 2020 - 05:01:03 PM | Posted IP 162.1*****

Tirunelveli um vendum

K.ganeshan . secretary, Thoothukudi makkal vazhvathara pathukappu sangam.Mar 26, 2020 - 09:53:50 PM | Posted IP 108.1*****

Very nice arrangment.we all welcome it. Thanks.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu CommunicationsFriends Track CALL TAXI & CAB (P) LTD


Black Forest Cakes
Thoothukudi Business Directory