» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

உழக்குடியில் முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு: தொல்லியல் துறை ஆய்வு நடத்துமா?

சனி 14, மார்ச் 2020 5:16:36 PM (IST)


வல்லநாடு அருகே உழக்குடியில் முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே உள்ள உள்ள கலியாவூர் பஞ்சாயத்து உழக்குடியை சேர்ந்த ஆறுமுக மாசன சுடலை என்பவர் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் வரலாற்று துறை பட்டய ஆய்வு மாணவராக உள்ளார். இவர் உழக்குடியில் கிடைத்த முதுமக்கள் தாழிகளை கொண்டு முதல் ஆய்வறிக்கை தகவல் செய்துள்ளார். அவர் உழக்குடியில் உள்ள உழக்குடி குளத்தில் உள்ள தாழி, ஊர் அருகில் உள்ள பாறையில் பாறை ஓவியம் மற்றும் உழக்குடி கலியாவூர் சாலையில் கிடைத்த பானை ஓடுகளை கண்டுபிடித்துள்ளார். 

இதுகுறித்து ஆறுமுக மாசன சுடலை கூறும் போது, எங்கள் ஊரில் உழக்குடி கலியாவூரில் செல்லும் சாலையின் ஓரமாக பல ஆண்டுகளுக்கு முன்பு ஓடை தோண்டினார்கள். அப்போது பல வகையான மட்பாண்டங்கள் உடைந்த நிலையில் வேளிப்பட்டன. மேலும் தற்போது அவ்விடத்தில் மழை நீர் கேசரிப்பு தடுப்பணை கட்டுவதற்கு குழ தோண்டிய போது பல தொன்மையான பொருட்கள் வெளிப்பட்டன. அப்பொருட்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்ததாகும். கருப்பு சிவப்பு நிற மட்பாண்டம், பளபளப்பான கருப்பு நிற மட்பாண்டம், உள்புறம் கருப்பு வெளிப்புறம் சிவப்பு நிற மட்பாண்டம் மண்ணாலான நீர் வடிகட்டி, விளையாட்டுப் பொருள்கள் பானைக்குள் கீழ் வைக்கப்ப பயன்படுத்திய பாருள்கள் கிடைத்துள்ளது. தற்போது உழக்குடி குளத்து அருகே மிகப்பெரிய முதுமக்கள் தாழி உள்ளது. இந்த தாழிகளை முறைப்படி மாநில தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என அவர் கோரினார். இவருடன் எழுத்தாளரும் தொல்லியல் ஆய்வாளருமான முத்தாலங்குறிச்சி காமராசு உடனிருந்தார்.


மக்கள் கருத்து

கனகாSep 23, 2020 - 07:42:44 AM | Posted IP 108.1*****

தொல்லியல் அகழ்வாய்வு பொருட்கள் எல்லாம் பலவும் விற்கப்படுவது நியாயமா ? ; தொல்லியல் அகழ்வாய்வு நடக்கும் கொடுமணல் மக்கள் பா ர்வைக்கு மறுக்கப்டுவது ஏன் ? ; எங்கு பார்த்தாலும் ஊழல் .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Anbu Communications

Black Forest CakesThoothukudi Business Directory