» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழக முதல்வர் வருகையை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்: தூத்துக்குடி மாவட்ட எஸ்பி தகவல்

வெள்ளி 21, பிப்ரவரி 2020 10:13:31 AM (IST)

தமிழக முதல்வர் வருகையை முன்னிட்டு திருச்செந்தூரிலிருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் வாகன போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் வெளியிட்ட செய்திக்குறிப்பு : டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபம் திறப்பு விழாவிற்கு திருச்செந்தூருக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் 22.02.2020 அன்று வருகை தர இருப்பதால் திருச்செந்தூரிலிருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் வாகன போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு பயணம் செய்யும் பொது மக்களின் வசதிக்காக 22.02.2020 அன்று காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை மட்டும் தற்காலிகமாக போக்குவரத்து மாற்றத்திற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் செய்துள்ளனர்.

அதன்படி திருச்செந்தூரிலிருந்து தூத்துக்குடி செல்லும் நான்கு சக்கர வாகனங்கள், கன ரக வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும்,  திருச்செந்தூரிலிருந்து குரும்பூர், ஏரல், சாயர்புரம், புதுக்கோட்டை வழியாகவும் அல்லது குரும்பூர், ஸ்ரீவைகுண்டம், பேட்மாநகரம், வாகைக்குளம், புதுக்கோட்டை வழியாக தூத்துக்குடி செல்வதற்கும், அதே போன்று தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வாகனங்கள் புதுக்கோட்டை, சாயர்புரம், ஏரல், குரும்பூர் வழியாகவும் அல்லது புதுக்கோட்டை, வாகைக்குளம், பேட்மாநகரம், ஸ்ரீவைகுண்டம் வழியாகவும் திருச்செந்தூர் செல்வதற்கும் போக்குவரத்து தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆகவே பயணம் செய்யும் பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுத்து மேற்படி இரண்டு வழிகளில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி போக்குவரத்து சிரமமில்லாமல் பயணம் செய்யுமாறு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.


மக்கள் கருத்து

மக்கள்Feb 21, 2020 - 02:45:39 PM | Posted IP 173.2*****

பதில் சொல்லிடு தாந மறு வேலை

ராமநாதபூபதிFeb 21, 2020 - 11:03:29 AM | Posted IP 108.1*****

அப்போ ஆத்தூர் முக்காணி போறவங்க எப்படி போகணும் பாஸ்?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD
Black Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory