» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மறைந்த போதகர் கல்லறையை தேடி வந்த வாரிசுகள் : நாசரேத்தில் நெகிழ்ச்சி சம்பவம்

வியாழன் 20, பிப்ரவரி 2020 8:39:48 PM (IST)அறுபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பு  நாசரேத்-திருமறையூர் இறையியல் கல்லூரியில் முதல்வராக பணி செய்து மறைந்த இங்கிலாந்து போதகர் டி.சி. விட்னி கல்லறையை தேடி அவரது வாரிசுகள் வந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

1913-ஆம் ஆண்டு போதகர் பணிக்காக போதகர் டி.சி. விட்னி என்பவர் இங்கிலாந்தில் இருந்து ஈரோடு பகுதிக்கு வந்தார். 1914-ஆம் ஆண்டு போதகர் டி.சி.விட்னியும் டாக்டர் ரீஸ்ம் ஈரோட்டில் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஆலன் விட்னி என்ற மகன் பிறந்தார். 1924-ஆம் ஆண்டு போதகர் விட்னிக்கு பணியிட மாறுதல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து அங்கிருந்து நெல்லை, தூத்துக்குடி பகுதிகளுக்கு பணியிட மாறுதல் ஆகி மதபோதக பணி மற்றும் மருத்துவ சேவைப்பணியில் ஈடுபட்டு வந்தனர். தூத்துக்குடி பகுதியில் பணியில் இருந்தபோது போதகர் விட்னி 1952 ம் ஆண்டு திருமறையூரில் காலமானார். 

அதைத் தொடர்ந்து டாக்டர் ரீஸ், ஆலன் விட்னியும் இங்கிலாந்து சென்றுவிட்டனர். போதகர் விட்னியின் பேரன் சைமன் விட்னி, பேத்தி பென்னி ஸ்மித் ஆகியோர் அவருடைய கல்லறையை சுமார் 20 ஆண்டுகளாக தேடிவந்த நிலையில் திருநெல்வேலியில் பல்வேறு திருச்சபை வரலாற்று செய்திகளை இளம் தலைமுறைக்கு எடுத்து சொல்லி கொண்டு இருக்கும் திருநெல்வேலி கிறிஸ்டியன் வரலாற்று சங்கத்தின் செயலர் மன்னா செல்வகுமார் அவர்களை தொடர்பு கொண்டு போதகர் டி.சி.விட்னியின் கல்லறையை கண்டறிந்து தருமாறு சேலம் வரலாற்று குழுவினர் கேட்டனர். 

அதை தொடர்ந்து திருநெல்வேலி கிறிஸ்டியன் வரலாற்று சங்க குழுவினர் மன்னா செல்வகுமார் திருமறையூர் ஆபிரகாம், ரூபன், ஜஸ்டின், அருள்மணி குழு கல்லறையை திருமறையூர், வாழையடி, நாசரேத் பகுதிகளில் பல நாட்களாக கள ஆய்வுகளை மேற்கொண்டனர். நாசரேத் கல்லறை தோட்டத்தில் போதகர் விட்னியின் கல்லறை கண்டு பிடிக்கப்பட்டது பேரன் பென்னி சைமனுக்கு அறிவிக்கப்பட்டு அவர்கள் இன்று (20.02.2020)வந்து கல்லறையில் மலர் வளையம் வைத்து போதகர் விட்னியின் செய்த பணிகளை நினைவு கூர்ந்தார்கள். தங்கள் தாத்தா, பாட்டி வாழ்ந்த வீடு, கல்லுாரி , மருத்துவனை, போன்ற இடங்களை பார்த்து தெரிந்து கொண்டனர். 

பின்னர் திருநெல்வேலி திருச்சபையின் தாய் என்று அழைக்கப்படும் குளோரிந்தால் நினைவு இடத்தையும் பார்த்து மகிழந்தனர்.அவர்களை துத்துக்குடி நாசரேத் திருமண்டல பேராயர் சார்பில் டி.ஜி.ஏ.தாமஸ் வரலாற்றாளர் ஜெயசீலன் மற்றும் பேராலய தலைமை குருவானவர் எட்வின் ஜெபராஜ் மற்றும் சபை மக்களும், நர்சிங் கல்லுரி சார்பாக விருந்து அளித்து கவுரவபடுத்தப்பட்டனார். இவர்களுடன் ஈரோடு ரமேஷ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயசீலன், ரத்தினகுமார், சுஜித், சார்லஸ், பீட்டர், பென்னி ஸ்மித் இங்கிலாந்தில் ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். சைமன் விட்னி கட்டிட வடிவமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.


மக்கள் கருத்து

உண்மைFeb 21, 2020 - 06:09:04 PM | Posted IP 108.1*****

மதவெறி பிடித்த டுமிழன் அவர்களுக்கு .. மதராசபட்டினம் படத்தை பாரு ஆங்கிலேயர்களின் சில நல்லவர்கள் இருக்கிறார்கள், கெட்டவர்களும் இருக்கிறார்கள் .. நாங்க நம்புவது நல்லவர்களைத்தான் உங்களுக்கென்ன??? நல்லவர்களை வரவேற்போம் ...

ஆசீர். விFeb 21, 2020 - 03:02:29 PM | Posted IP 173.2*****

இது போல இப்போ இருக்கும் ஆட்களுக்கு ஏதேனும் வரலாறு உண்டா? அதான் வரலாறை சொன்னவுடன் கோவப்படுறான் பாரு அவன்தான் பிறன் உழைப்பில் மணியாட்டி வாழ்பவன்

PSCCFeb 21, 2020 - 03:02:17 PM | Posted IP 162.1*****

முட்டா மணி

தமிழன்Feb 21, 2020 - 01:23:42 PM | Posted IP 173.2*****

நம்மை அடிமை படுத்திய ஆங்கிலேயனின் கல்லறை.......இவ்வளவு முக்கியம் இந்த செய்திக்கு தேவையா டூட்டி ஆன்லைன் ஆசிரியர் அவர்களே?

S. JeyaramanFeb 21, 2020 - 09:56:42 AM | Posted IP 162.1*****

Great

தமிழ்ச்செல்வன்Feb 21, 2020 - 09:55:30 AM | Posted IP 108.1*****

எவ்வளவு பெரிய வரலாற்று விஷயம். அது மத வெறி பிடித்த மணிக்கு சாதாரணமாக தெரிகிறதா?

ManiFeb 21, 2020 - 01:21:22 AM | Posted IP 108.1*****

Tutyonline kku idhu thevaiya ? Idhellam or news nu potukitu....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest CakesAnbu CommunicationsThoothukudi Business Directory