» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புதிய ரேசன்கடை கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா

வியாழன் 20, பிப்ரவரி 2020 7:49:31 PM (IST)பொத்தகாலன்விளையில் புதிய ரேசன்கடை கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஒன்றியம் சாஸ்தாவிநல்லூர் ஊராட்சிக்குள்பட்ட பொத்த‌க்கால‌ன்விளையில் அங்குள்ள  கூட்டுறவு கடன் சங்கம் அருகில் இடம் போதாத நிலையில் இயங்கி வந்தது. இதையடுத்து கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் லூர்துமணி, மாவட்டஆட்சியரிடம் முறையிட்டார். அதன்பேரில் மாவட்ட ஆட்சியர் அவரது நிதியில் ரூ.12 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்தார். இந்நிலையில் பொத்தகாலன்விளையில் கூட்டுறவு கடன் சங்க அலுவலக வளாகத்தில்  ரேசன் கடை புதிய‌ கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. 

விழாவுக்கு கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் லூர்தும‌ணி தலைமை வகித்தார். சாஸ்தாவிநல்லூர் ஊராட்சித் தலைவர் திருக்கல்யாணி, ச‌ங்க‌ முன்னாள் தலைவர் சூசைசெசன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சங்க‌ செயலர் ராஜகுமார் வ‌ரவேற்றார். இலங்கநாதபுரம் ப‌ங்கு த‌ந்தை ஜோச‌ப் ரெத்தினராஜ், ஜெபித்து  அடிக்கல் நாட்டி கட்டிட பணியை தொடங்கி வைத்தார்.

இதில்  மாவ‌ட்ட கவுன்சிலர் தேவவிண்ணரசி ,நிர்வாக‌க்குழு உறுப்பினர்க‌ள் அருள்ராஜ் ,இருதயராஜ்,அமல்ராஜ்,சாந்தி, பர‌ணிதேவி, ஊராட்சிமன்ற  உறுப்பினர்கள் ஜாண்சன்,தேன்மலர்,ராஜகனி மற்றும் கிராம  பிரமுகர்கள் சுவாமிநாதன், டேவிட் வேத‌ராஜ்,சந்தன திரவியம்,அந்தோணி செல்வன், எட்வர்ட்,ஜெயசீலன் உள்ளிட்ட  சங்க பணியாளர்கள்  கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu CommunicationsFriends Track CALL TAXI & CAB (P) LTD


Black Forest CakesThoothukudi Business Directory