» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

வியாழன் 20, பிப்ரவரி 2020 6:55:49 PM (IST)



மதவாத சக்திகளால் படுகொலை செய்யப் பட்ட முற்போக்கு சிந்தனையாளர் கோவிந்த் பன்சாரே நினைவு தினத்தை முன்னிட்டு ஜனநாயக மேடை சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி காமராஜ் கல்லுாரி அருகே இன்று மாலை நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஜனநாயக மேடை மாவட்ட அமைப்பாளர் ஞானசேகர் தலைமை வகித்தார். முன்னாள் கவுன்சிலர் சாஜகான் முன்னிலை வகித்தார். திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகர். கலை இலக்கிய பெருமன்றம் அருட்சகோதரி எழிலரசி, சிபிஎம் மாவட்ட செயலாளர் அர்ஜுனன், மதிமுக மாநில மீனவரணி அமைப்பாளர் நக்கீரன், சிபிஐ அழகு முத்து பாண்டியன்.விசிக மாவட்ட செயலாளர் இக்பால், மனிதநேய மக்கள் முன்னேற்ற கழக முகம்மது உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும்,மக்களை பாதிக்கும் மத்திய அரசு திட்டங்கள் குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD





Black Forest Cakes

Anbu Communications



Thoothukudi Business Directory