» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி வரும் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு : அமைச்சர் கடம்பூர் ராஜூ, சண்முகநாதன் எம்எல்ஏ அறிக்கை

வியாழன் 20, பிப்ரவரி 2020 6:40:16 PM (IST)

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வரும் தமிழக முதலமைச்சருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிப்பது என்றும் இதில் அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் பெரும் திரளாக பங்கேற்க மாவட்ட அதிமுக செயலாளர்கள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, எஸ்.பி .சண்முகநாதன் எம்எல்ஏ ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளரும், தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் செ.ராஜு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கையில் கூறியுள்ளதாவது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் கட்டப்பட்டு திறப்பு விழா காணும் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை திறந்து வைக்கவும், தூத்துக்குடி மாவட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், திறந்து வைக்கவும் 22 ம் தேதி சனிக்கிழமை தூத்துக்குடி மாவட்டம் வருகைதரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர்,  தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை , வரவேற்க தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட அதிமுக  சார்பில் எங்களது தலைமையில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அதன் அடிப்படையில் தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் வந்திறங்கும் தமிழக முதல்வருக்கு காலை விமான நிலைய வாயிலில் பூரணகும்ப மரியாதை அளிக்கப்படுகிறது. அதன் பின்பு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வருகை தரும் முதல்வருக்கு மருத்துவமனை நுழைவாயிலிலும், பின்பு தூத்துக்குடி முத்தையாபுரம், முள்ளக்காடு, பழையகாயல், முக்காணி, வடக்கு ஆத்தூர், தெற்கு ஆத்தூர், ஆறுமுகநேரி ஆகிய பகுதிகளில் கழகத்தினரும், பொதுமக்களும், பெருந்திரளாக திரண்டு வந்து முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியை வரவேற்கின்றனர். பின்பு திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டணம் விழா மேடை செல்லும் முதல்வருக்கு அங்கும்  உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. மேற்காணும் இடங்களில் முதல் அமைச்சரை வரவேற்க மேளதாளங்கள், ஆடல், பாடல், இசை வாத்தியங்கள், என  சிறப்பான ஏற்பாடுகள் மாவட்டக் அதிமுக சார்பில் செய்யப்பட்டுள்ளது.

நம் மாவட்டத்திற்கு வருகை தரும் முதல்வரை வரவேற்க  தலைமைக்கழக நிர்வாகிகள், இந்நாள், முன்னாள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி, ஊராட்சி, வட்ட, கிளைக்கழக நிர்வாகிகள், கழக சார்பு அணிகளின் பொறுப்பாளர்கள் உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்பு பிரதிநிதிகள் கழக தொண்டர்கள், மகளிர்கள், மற்றும் பொதுமக்கள்  என அனைவரும் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வரவேற்ப்பு இடத்தில் முதலமைச்சரை வரவேற்க  அலைகடலென வருகை புரிய வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD


Black Forest Cakes

Anbu Communications


Thoothukudi Business Directory