» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் துறைமுக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வியாழன் 20, பிப்ரவரி 2020 4:28:22 PM (IST)



மேஜர் போர்ட் அத்தாரிட்டி சட்டத்தை கைவிட வலியுறுத்தி தூத்துக்குடியில் துறைமுக அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

துறைமுகங்களை அழிக்கும் மேஜர் போர்ட் அதாரிட்டி சட்டத்தை கைவிட வேண்டும், சர்விஸ் விதிகளை தன்னிச்சையாக நிர்பந்தம் செய்து திருத்த கூடாது, எல்.ஐ.சி பங்கு விற்பனையை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி துறைமுக அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பில் துறைமுக நிர்வாக அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் சிஐடியூ மாவட்ட செயலாளர் ஆர்.ரசல், துறைமுக ஜனநாயக ஊழியர் சங்க செயலாளர் காசி,பொதுச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி,நேஷனல் ஹார்பர் ஒர்க்கர்ஸ் யூனியன் (ஐஎன்டியூசி) ராஜ கோபால், சந்திரசேகர், போர்ட் எம்பலாய்ஸ் டிரேட் யூனியன் சங்கரலிங்கம், போர்ட் மெரைன்ஸ் அண்ட் ஜெனரல் ஸ்டாப் யூனியன் (எச்எம்எஸ்) துறைமுகம்  சத்ய நாராணயன், வ.உ.சி.போர்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் (ஏஐடியூசி) ராஜ்குமார், யுனைட்டட் ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன் (எச்எம்எஸ்(டபிள்யூ)) கென்னடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

victerFeb 20, 2020 - 05:50:32 PM | Posted IP 162.1*****

வாழ்க வெல்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Anbu Communications

Black Forest Cakes


Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory