» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

புதன் 19, பிப்ரவரி 2020 8:27:35 PM (IST)

தூத்துக்குடியில் பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி ராஜமன்னார் தெருவை சேர்ந்த கருப்பசாமி என்பவரது மகள் சுஜாதா (16). ரெங்கநாதபுரத்திலுள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்துள்ளார். இந் நிலையில் இன்று  இவர் பள்ளிக்கு செல்லவில்லை என்றும் இது குறித்து அவரது தாயார் கேட்ட போது உடல்நிலை சரியில்லை என மாணவி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. மதியம் தாயார் வெளியே சென்றிருந்த போது வீட்டில் சுஜாதா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

வீட்டிற்கு திரும்பி வந்த அவரது தாயார், தனது மகள் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்து இது குறித்து வடபாகம் போலீசிற்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீசார் சம்பவ இடம் வந்து இறந்தவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  இச்சம்பவம் குறித்து புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அருள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Friends Track CALL TAXI & CAB (P) LTD

Black Forest Cakes


Anbu CommunicationsThoothukudi Business Directory