» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இரண்டு வாரமாக குடிநீர் வராததால் பொதுமக்கள் சாலை மறியல்

புதன் 19, பிப்ரவரி 2020 6:57:45 PM (IST)



இரண்டு வாரமாக குடிநீர் வராததை கண்டித்து தூத்துக்குடி வட்டக்கோவில் பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி சுந்தரவேல்புரம் பகுதியில் சாலைகளில் குழாய் பதிக்கும் வேலைகள் நடைபெற்று வருவதால் அப்பகுதியில் குடிநீர் விநியோகம் முழுவதுமாக பாதிக்கப்பட்டது. கடந்த இரண்டு வாரமாக குடிநீர் வராமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இது சம்பந்தமாக மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பாண்டி என்பவர் தலைமையில் 40 பெண்கள் உட்பட 70 பேர் தூத்துக்குடி டேவிஸ்புரம் பிரதான சாலையில் வட்டக்கோவில் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் வடபாகம் இன்ஸ்பெக்டர் அருள் மற்றும் பாேலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாெது மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். மேலும் மாநகராட்சி இன்ஸ்பெக்டர் மாரியப்பன், மற்றும் அதிகாரிகள் இன்று இரவுக்குள் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் போராட்டம் சுமார் 20 நிமிடம் நடைபெற்றதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Black Forest Cakes

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Anbu Communications




Thoothukudi Business Directory