» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்

புதன் 19, பிப்ரவரி 2020 6:43:26 PM (IST)



சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து அதனை திரும்பப் பெற வலியுறுத்தி தூத்துக்குடியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள கேஸ் சிலிண்டர் விலையை திரும்பப் பெற வலியுறுத்தி தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே  தூத்துக்குடி மாவட்ட மாநகர, காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சிஎஸ் முரளிதரன் தலைமை தாங்கினார். மண்டல தலைவர்கள் தங்கராஜ், செந்தூர் பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மத்திய அரசு சமையல் கேஸ் சிலிண்டர் விலையை குறைக்கக்கோரி நூதன முறையில் சிலிண்டருக்கு மாலை அணிவித்து, சந்தனம் வைத்து, ஒரு ரூபாய் நாணயம் வைத்தனர். பின்னர் நான் இருக்கிறேன், கவலைபடாதீர்கள் என்ற வாசகம் அடங்கிய மண்பானையை அடுப்பில் வைத்து போராட்டம் நடத்தினர்.  

இதில் மாவட்ட சேவா தள தலைவர், பிஜேசி சுரேஷ், மாவட்ட மகளிரணி தலைவர் முத்து விஜயா, முன்னாள் தலைவர் கனியம்மாள், மாவட்ட செயலாளர் கோபால், மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் சாமுவேல் ஞானதுரை, காங்கிரஸ் நிர்வாகிகள் எடிசன், ராஜாராம், பாரகன் அந்தோணி முத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Friends Track CALL TAXI & CAB (P) LTD


Black Forest Cakes






Thoothukudi Business Directory