» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

டிராக்டர் மீது லாரி மோதிய விபத்து : 3 பெண்கள் பலி, 8 பேர் படுகாயம்

புதன் 19, பிப்ரவரி 2020 6:16:46 PM (IST)

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே டிராக்டர் மீது லாரி மோதிய விபத்தில் மூன்று பெண்கள் பரிதாபமாக பலியானார்கள்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம், மாதப்புரம் பகுதிகளை சேர்ந்த  பெண்கள் எட்டயபுரம் அருகில் இருக்கும் தோட்டத்திற்கு வேலைக்கு சென்று வீட்டு டிராக்டரில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர். டிராக்டரை பெரியசாமி (65)என்பவர் ஓட்டி வந்துள்ளார். டிராக்டர் எட்டயபுரம் மின்சார வாரியம் அலுவலகம் அருகே வந்த கொண்டு இருந்த போது, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு நிலக்கரி இறக்கி விட்டு தூத்துக்குடிக்கு சென்று கொண்டு இருந்த லாரி டிராக்டர் மீது மோதியது. 

இதில் டிராக்டர் தலைகீழாக விழுந்து, அதன் பாகங்கள் சிதறின. மேலும் டிராக்டரில் வந்த மாதாபுரத்தை சேர்ந்த  அந்தோணியம்மாள் (55) , பீட்டர் மனைவி கீதாராணி (43) ஆகியோர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும்10 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்தும் எட்டயபுரம் போலீசார் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

 வரும் வழியில் எட்டயபுரம் ஆர்சி தெருவை சேர்ந்த பெரியசாமி மனைவி மரகதம்மாள் (55) பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இம்மானுவேல் மனைவி மரிய விஜி (45), காசி ராஜன் மகள் பிரியங்கா (27), அமல்ராஜ் மனைவி பத்ரகாளி, தங்கதாஸ் மனைவி மரிய பாக்கியம் (55), மணிகண்டன் மனைவி ராமலட்சுமி (28), ராஜகுமரேசன் மனைவி லட்சுமி (26) பொன்னப்பன் மகன் ராஜேந்திரன் (57) ஆகிய 8 பேருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். . விபத்து குறித்து எட்டயபுரம் போலீசார் இன்ஸ்பெக்டர் கலா வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் மேல ஈராலை சேர்ந்த வெள்ளச்சாமி மகன் வெள்ளத்துரையை (32) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார். இந்த சம்பவத்தால் மாதாபுரம் கிராமம் சோகத்தில் மூழ்கியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications
Black Forest Cakes


Friends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory