» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மார்ச் 4‍ல் தொழிற்பழகுநர் பயிற்சி முகாம்: ஆட்சியர் தகவல்

புதன் 19, பிப்ரவரி 2020 5:44:59 PM (IST)

திருநெல்வேலி, பேட்டை அரசு ஐ.டி.ஐ.யில் மார்ச் 4-ஆம் தேதி நடைபெறும் தொழிற்பழகுநர் பயிற்சி முகாமில் தூத்துக்குடி மாவட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்

திருநெல்வேலி பேட்டை அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் ஐ.டி.ஐ தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் மற்றும் 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்த மாணவர்களுக்கு திருநெல்வேலி பேட்டை அரசு ஐ.டி.ஐ.யில் மார்ச் 4-ஆம் தேதி புதன்கிழமை காலை 9.00 மணி முதல் தேசிய தொழிற்பழகுநர் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பாக திருநெல்வேலி மண்டல அளவிலான(தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் சேர்ந்தது) தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற இருக்கின்றது.

ஐ.டி.ஐ. முடித்தவர்கள், 8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்; இம்முகாமில் கலந்து கொள்ள தகுதி படைத்தவர்களாவர்.மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாம் மூலம் சுமார் 2500- க்;கும் மேற்பட்ட தொழிற்பழகுநர் இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் பங்கேற்று தேர்வு பெறுபவர்களுக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்ற தேசிய தொழிற்பழகுநர் சான்று வழங்கப்படும். இச்சான்றானது ஐ.டி.ஐ. முடித்து தேசிய தொழிற்சான்று பெற்றவரை விட தேசிய தொழிற்பழகுநர் சான்று பெற்றவர்கள் கூடுதல் முழுத்திறமை பெற்றவர்களாக கருதப்படுவர். பெரிய தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு எளிதாக கிடைக்கும். மேலும் மாதாந்திர உதவித் தொகையாக குறைந்தபட்சம் ரூ.7000/- வரை வழங்கப்படுகிறது.

எனவே இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தூத்துக்குடி மாவட்ட மாணவ மாணவியர் பயன் அடையுமாறு மண்டல பயிற்சி இணை இயக்குநர் /மண்டல தொழிற் பழகுநர் ஆலோசகர் தெரிவித்துள்ளார்கள். மேலும் இது தொடர்பான விவரங்களை அறிய ஜெ.ஏஞ்சல் விசய நிர்மலா, உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம்(அரசு தொழிற் பயிற்சி நிலைய வளாகம்), தூத்துக்குடி அவர்களை 0461-2340041 என்ற எண்ணுக்கோ அல்லது 8778333588, 9443972101 என்ற எண்களுக்கோ தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsFriends Track CALL TAXI & CAB (P) LTD

Anbu CommunicationsBlack Forest CakesThoothukudi Business Directory