» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அன்னம்மாள் கல்லூரியில் திருநங்கைகளுக்கான நிகழ்ச்சி

புதன் 19, பிப்ரவரி 2020 5:12:41 PM (IST)



தூத்துக்குடி, அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரி சார்பில் திருநங்கைகளுக்கான  வாழ்வியலை மேம்படுத்துதல்’ நிகழ்ச்சி நடைபெற்றது. 

தூத்துக்குடி, அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியின் உள் தர உத்திரவாத அமைப்பானது இந்திய மருத்துவ சங்கம் மற்றும் தூத்துக்குடி பியர்ல் சிட்டி ரோட்டரி சங்கத்துடன் இணைந்து இன்று திருநங்கைகள் வாழ்வியலை மேம்படுத்துதல்’ நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தியது. இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடியை சேர்ந்த  24 திருநங்கைகள் பங்கேற்றனர். கல்லூரி முதல்வர்  ஜாய்சிலின் சர்மிளா வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக பியர்ல் சிட்டி ரோட்டரி சங்க உறுப்பினர்கள் கண்ணன்,பாலமுருகன், மற்றும் மகாலிங்கம் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியில் மனநல மருத்துவர் சிவசைலம், திருநங்கைகள் தங்களது வாழ்வாதார பிரச்சினைகளை சவாலாக எதிர்கொண்டு வெற்றி பெற ஊக்குவித்து அவர்களை பாராட்டி ஊக்கவுரை நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து திருநங்கைகளுக்கு விளையாட்டு போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் சமூகத்தில் அங்கீகாரத்தை எதிர்பார்க்காமல் தமது வாழ்க்கையின் பிரச்சினைகளை எதிர்கொண்டு சாதனை படைக்க காத்திருக்கும் திருநங்கைகளை அங்கீகரிக்கும் நிகழ்ச்சியாக இது அமைந்தது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியை நா.சுதாகுமாரி செய்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications




Friends Track CALL TAXI & CAB (P) LTD

Black Forest Cakes




Thoothukudi Business Directory