» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழக முதல்வர் 22ம் தேதி தூத்துக்குடி வருகை : பாதுகாப்பு ஏற்பாடுகளை தென் மண்டல ஐஜி ஆய்வு

செவ்வாய் 18, பிப்ரவரி 2020 11:57:39 AM (IST)தமிழக முதல்வர் வருகையை முன்னிட்டு தூத்துக்குடியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தென் மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன் ஆய்வு செய்தார். 

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்பு விழா  வருகிற 22-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த மண்டபத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிதிறந்து வைக்கிறார். அந்த விழாவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ரூ.18 கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ள புற்றுநோய் சிகிச்சைக்கான கருவியை முதல்வர் காணொளி மூலம் தொடங்கி வைக்கிறார். மேலும், முதல்வர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று அந்த கருவியை பார்வையிட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், தமிழக முதல்வர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக தென் மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன் இன்று தூத்துக்குடி வந்தார். முதல்வர் பயணத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள பகுதிகளை அவர் பார்வையிட்டார். அதன்படி தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலும் அவர் ஆய்வு செய்தார். பின்னர் அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொறுப்பு) டாக்டர் குமரன், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி, மாவட்ட எஸ்பி அருண் பாலகோபாலன், மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆய்வின்போது, மருத்துவமனை, மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

A.Stephen Victor Selva vinayaga puram ,ward_3,Mar 9, 2020 - 02:40:32 AM | Posted IP 108.1*****

Kindly make the stone and mud road into tar road.

ராமநாதபூபதிFeb 19, 2020 - 09:53:09 AM | Posted IP 108.1*****

பாதுகாப்பு ஏற்பாடுகளையெல்லாம் அப்புறம் பாருங்க. ரோட்டில இருக்குற குழியிலே முதல்வரோட காரு இறங்கி முதல்வருக்கு முதுகு பிடிப்பு வந்துராம. மொதல்ல ரோட்டை சரி பண்ணுங்க. பிறகு பாதுகாப்பு ஏற்பாட்டை பாருங்க. இந்த மாதிரி ரோட்டில் போவதே பாதுகாப்பு குறைபாடு தான்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest Cakes


Anbu Communications
Thoothukudi Business Directory