» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழக முதல்வர் பிப் 22 -ல் தூத்துக்குடி வருகை : அதிமுக ஆலோசனை

ஞாயிறு 16, பிப்ரவரி 2020 12:28:36 PM (IST)



தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி வருவதை முன்னிட்டு அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 22 ம் தேதி தூத்துக்குடி வருகிறார். இதை முன்னிட்டு  தமிழக முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து அதிமுக தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக  செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ ஆகியோரின் தலைமையில் பானுபிருந்தாவன் ஹோட்டலில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் தூத்துக்குடி வரும் தமிழக முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என்றும் அதிமுகவினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.


மக்கள் கருத்து

OOPSFeb 17, 2020 - 11:58:26 AM | Posted IP 108.1*****

மொத மொதல்ல கூவத்தூர் கூத்துல இருந்து வெளிய வந்த அண்ணாச்சி இன்னும் MLA தான். ministry ல இடம் இல்ல. தமிழனுக்கு மரியாதை இல்ல.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes




Anbu Communications

Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory