» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மரியன்னை கல்லூரி சார்பில் இலவச மருத்துவ முகாம்

ஞாயிறு 16, பிப்ரவரி 2020 12:05:29 PM (IST)



தூய மரியன்னை கல்லூரியின் சார்பாக டெங்கு விழிப்புணர்வு மற்றும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி, தூய மரியன்னை கல்லூரி ஆங்கிலத் துறை, உன்னத் பாரத் அபியான், தருவைகுளத்தில், டெங்கு விழிப்புணர்வு மற்றும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. மாணவியர் அனைவரும் தனிப்பட்ட முறையில் 525 குடும்பங்களைச் சந்தித்து டெங்கு காய்ச்சல் மற்றும் டெங்கு கொசுக்கள் பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எடுத்துக் கூறினர். இத்துடன் தூய மரியன்னை கல்லூரி மற்றும் சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனை, தூத்துக்குடி இணைந்து இலவச மருத்துவ முகாம், தூய மிக்கேல் மழலையர் பள்ளியில் நடத்தப்பட்டது. 

இம் மருத்துவ முகாமின் மூலம் நூற்றுக்கு மேற்பட்ட பயனாளிகள் பயன் பெற்றனர். ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள், மாணவிகளுக்கு டெங்கு மற்றும் கொரானா வைரஸ் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம், தூய கத்திரினம்மாள் துவக்கப் பள்ளியில் நடைபெற்றது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications





Friends Track CALL TAXI & CAB (P) LTD

Black Forest Cakes



Thoothukudi Business Directory