» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆட்டோவில் ஆடு திருட முயன்றவர்கள் கைது

ஞாயிறு 16, பிப்ரவரி 2020 11:41:54 AM (IST)

குலசேகரப்பட்டணம் அருகே ஆட்டோவில் ஆடு திருட முயன்றதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரப்பட்டணம் கொட்டங்காடு கிராமத்தை சேர்ந்தவர் தங்கலிங்கம் மகன் சிவராஜ் (41) ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவர் தனது ஆடுகளை குலசேகரப்பட்டணம் கொட்டங்காடு ரோட்டிலுள்ள ஒரு தோட்டத்தில் வைத்து மேய்த்து கொண்டிருந்துள்ளார். அப்போது ஒரு ஆட்டோவில் வந்த 2 பேர் 5 ஆடுகளை ஆட்டோவில் ஏற்ற முயன்றார்களாம். இதை பார்த்த சிவராஜ் கூச்சல் போடவே அருகிலுள்ளோர் வந்து 2 பேரையும் பிடித்து குலசேகரப்பட்டணம் போலீசில் ஒப்படைத்தனர். 

எஸ்ஐ., முனியாண்டி 2 பேரையும் விசாரித்ததில் அவர்கள் குலசை., முப்பிடாதி அம்மன் காேவில் தெருவை சேர்ந்த முருகன் மகன் பொன்முத்து (28), நம்பி மகன் இசக்கிமுத்து (17) என தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் ஆடுகளையும், ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD




Anbu Communications

Black Forest Cakes



Thoothukudi Business Directory