» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் 15 பவுன் நகை திருடிய இளம்பெண் கைது

ஞாயிறு 16, பிப்ரவரி 2020 9:34:30 AM (IST)

திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் 15 பவுன் நகை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள காயாமொழி வள்ளுவர் நகரை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி முத்தம்மாள் (40) இவரும் இவரது உறவினரும் கடந்த ஜனவரி மாதம் திருச்செந்தூருக்கு வந்துவிட்டு காயாமொழி திரும்புவதற்காக திருச்செந்தூர் பேருந்து நிலையம் வந்தனர். பேருந்தில் ஏறி அமர்ந்ததும் டிக்கெட் எடுப்பதற்காக முத்தம்மாள் கையிலுள்ள பர்சை பார்த்தபோது, அதில் இருந்த 15 பவுன் நகையை காணவில்லை. யாரோ மர்ம நபர் அதனை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர் திருச்செந்தூர் தாலூகா காவல் நிலையத்தில் புகார் செய்தார். 

புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். இதில் அவர் நாகர்கோவில், ராஜமங்கலம் அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த உண்ணிகுட்டன் மனைவி துர்கா (24) என்பதும், அவர் கடந்த மாதம் ஜனவரி மாதம் திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் முத்தம்மாளிடம் 15 பவுன் நகையை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து நகையை மீட்டு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Anbu Communications

Friends Track CALL TAXI & CAB (P) LTD





Thoothukudi Business Directory