» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மனைவி, கள்ளக்காதலனை வெட்டிக் கொன்ற கணவன் போலீசில் சரண்: பசுவந்தனை அருகே பயங்கரம்!!

ஞாயிறு 16, பிப்ரவரி 2020 9:04:06 AM (IST)

பசுவந்தனை அருகே மனைவியையும், அவரது கள்ளக் காதலனையும் சராமாரியாக வெட்டிக் கொன்ற கணவன் போலீசில் சரண் அடைந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை, புங்கவர்நத்தம், அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் சண்முகம் (58) மேள கலைஞர். இவருக்கு திருமணமாகி மூன்று மகள்கள் உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன் முதல் மனைவி இறந்துவிட்டார். இதன் பின்னர் அதே பகுதியை சேர்ந்த மாரியம்மாள் (48) என்பவரை திருமணம் செய்தார். மாரியம்மாள் இவர் புங்கவர்நத்தம் பஞ்சாயத்தில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வந்தார். மாரியம்மாளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களின் ஒரு மகன் தவிர்த்து அனைவருக்கும் திருமணமாகி விட்டது. 

சண்முகம் அடிக்கடி மேளம் அடிப்பதற்காக வெளியூருக்கு சென்று வந்தார். இதனால் மாரியம்மாள் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார். மாரியம்மாளின் எதிர்வீட்டைச் சேர்ந்தவர் சித்தரைவேல் மகன் ராமமூர்த்தி (28). இவரும் பஞ்சாயத்தில் குடிநீர் பம்பு ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். இதன் காரணமாக இவர்கள் 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த சண்முகம் தனது மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் அவர் தொடர்ந்து கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்தார். 

இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் மாரியம்மாளும், ராமமூர்த்தியும் தனிமையில் இருந்துள்ளனர். இதனைப் பார்த்து ஆத்திரம் அடைந்த சண்முகம் அவர்கள் இருவரையும் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளார். பின்னர் ரத்தம் தோய்ந்த அரிவாளுடன் பசுவந்தனை காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை இன்ஸ்பெக்டர் மணிமொழி கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி., அருண் பாலகோபாலன் பார்வையிட்டார். கொலை செய்யப்பட்ட இருவரது உடல்களும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த இரட்டைக் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

neethiFeb 19, 2020 - 03:15:36 PM | Posted IP 173.2*****

sabah nee than ya unmaiyana aan mahan

kumarFeb 17, 2020 - 11:00:48 PM | Posted IP 162.1*****

கொடும.. கொடும...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Friends Track CALL TAXI & CAB (P) LTD


Anbu Communications


Thoothukudi Business Directory