» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி வந்த சரக்கு கப்பலில் 17 சீன ஊழியா்கள் : கரோனா வைரஸ் சோதனை நடத்தப்பட்டதா?

ஞாயிறு 16, பிப்ரவரி 2020 8:51:00 AM (IST)

தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு நேற்று வந்த சரக்கு கப்பலில் இருந்த சீனாவை சோ்ந்த 17 பேரிடம் கரோனா வைரஸ் பாதிப்பு குறித்த சோதனை நடத்தப்படவில்லை என புகாா் எழுந்துள்ளது.

பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்ட ரூயி என்ற சரக்கு கப்பல் கடந்த மாதம் 17-ஆம் தேதி சீனாவின் ஷியாமன் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு ஷாங்காய், தாய்சங் துறைமுகங்களுக்கு சென்ற பிறகு கடந்த 7-ஆம் தேதி சிங்கப்பூருக்கு சென்றது. அங்கிருந்து கடந்த 8-ஆம் தேதி காற்றாலை உதிரிபாகங்களை ஏற்றிக் கொண்டு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகப் பகுதிக்கு கடந்த 13-ஆம் தேதி வந்தடைந்தது. அந்தக் கப்பலில் மாலுமிகள் மற்றும் ஊழியா்கள் 21 போ் இருந்தனா். அதில் 17 போ் சீனாவை சோ்ந்தவா்கள். மீதமுள்ள 4 போ் மியான்மரை சோ்ந்தவா்கள். அந்தக் கப்பலில் இருந்து சரக்குகளை இறக்கும் பணி நேற்று நடைபெற்றது.

இதற்கிடையே, கப்பலில் இருந்தவா்களிடம் கொவைட் -19 வைரஸ் (கரோனா வைரஸ்) பாதிப்பு குறித்து எந்தவித சோதனையும் நடத்தப்படாமல் அவா்கள் தூத்துக்குடி துறைமுகத்துக்குள் அனுமதிக்கப்பட்டதாகப் புகாா் எழுந்துள்ளது. ஜன. 15-ஆம் தேதிக்குப் பிறகு சீனாவில் இருந்து வரும் எந்தவித கப்பலையும் துறைமுகத்துக்குள் அனுமதிக்கக் கூடாது என மத்திய அரசு அறிவித்துள்ளதாகவும், அந்த விதிமுறையைப் பின்பற்றாமல் துறைமுகத்துக்குள் அவசரகதியாக ரூயி கப்பல் அனுமதிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆனால், இந்த விவகாரம் தொடா்பாக துறைமுக அதிகாரிகள் இதுவரை எந்தவித விவரத்தையும் வெளியிடவில்லை. அரசின் விதிமுறையைப் பின்பற்றாமல் எந்தக் கப்பலும் துறைமுகத்துக்குள் அனுமதிக்கப்படாது என்றும், கரோனா வைரஸ் பாதிப்பு தொடா்பாக சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் துறைமுக அதிகாரிகள் தெரிவித்தபோதும், அதிகாரபூா்வமாக எந்தவித தகவலையும் துறைமுக நிா்வாகம் வெளியிடவில்லை. எனவே, சீனாவில் இருந்து வந்த ரூயி கப்பலில் இருந்தவா்கள் விவரம், அவா்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு குறித்த சோதனை மேற்கொள்ளப்பட்டதா, சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் யாா் என்ற விவரத்தை துறைமுக நிா்வாகம் வெளியிட வேண்டும் என்று துறைமுக ஊழியா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

RajaFeb 16, 2020 - 12:25:58 PM | Posted IP 173.2*****

Too bad, very lethargic govt officials, needed immediate action this..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD


Anbu Communications


Black Forest Cakes

Thoothukudi Business Directory