» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஷிப்பிங் ஊழியர் வீட்டில் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை!!

வெள்ளி 14, பிப்ரவரி 2020 5:02:22 PM (IST)


தூத்துக்குடியில் ஷிப்பிங் கம்பெனி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி முத்தம்மாள் காலனி 7வது தெருவைச் சேர்ந்தவர் மந்திரம் மகன் இசக்கி (46), இவர் தூத்துக்குடியில் உள்ள ஷிப்பிங் கம்பெனியில் வேலைபார்த்து வருகிறார். இவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். நேற்று வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னை சென்றுள்ளார். இந்நிலையில், பக்கத்து வீட்டில் வசிக்கும் இவரது அண்ணன் குமார் என்பவர் இன்று காலை அவரது வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. 

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். வீட்டின் உள்ள  பீரோவில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருக்கலாம் எனத் தெரிகிறது. இசக்கி, ஊர் திரும்பிய பின்னரே கொள்ளை போன பொருட்களின் முழுவிபரம் தெரியவரும். இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிந்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Anbu Communications


Black Forest Cakes



Thoothukudi Business Directory