» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மதுவுக்கு அடிமையான தந்தை... ரயில் நிலையத்தில் தவித்த 3 குழந்தைகள் மீட்பு

வெள்ளி 14, பிப்ரவரி 2020 4:26:38 PM (IST)தூத்துக்குடி ரயில் நிலையத்தில் தவித்த மூன்று குழந்தைகள் முத்துக்குவியல் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளி குழந்தை உட்பட 3 குழந்தைகள் பெற்றோர் யாருமின்றி அனாதையாக தவித்தனர். இதுகுறித்து ரயில்வே போலீசார் அந்த குழந்தைகளை மீட்டு, சைல்டு லைன் மூலம் முத்துக்குவியல் இல்லத்தில் ஒப்படைத்தனர். மேலும், போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த குழந்தைகள் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தாலுகா, ஆமனக்குநத்தம், இந்திரா காலனியைச் சேர்ந்த   சங்கிலி கருப்பன் என்பவரது குழந்தைகள் என்பது தெரியவந்தது.

இந்நிலையில் ரயில் நிலையத்தில் தனது குழந்தைகளை தேடி வந்த சங்கிலி கருப்பனை போலீசார் விசாரணை நடத்தி, தனது ஆவணங்களை எடுத்து கொண்டு, தனது மனைவியுடன்  வர சொல்லி  அனுப்பி வைத்தனர். அவரது குழந்தைகள் பார்த்தசாரதி (11), சாதனபிரியா (9), மீனப்ரியா (2½) ஆகிய மூவரில் சாதனபிரியா மாற்றுத் திறனாளி குழந்தையாவார். சங்கிலி கருப்பன், மதுபழக்கத்திற்கு அடிமையாகி, தனது மனைவியை பிரிந்து 4 மாதமாக தனது குழந்தைகளுடன்  சுற்றி திரிந்துள்ளார். இதனால் குழந்தைகளின் எதிர்காலம் கருதி போலீசார் குழந்தைகளை காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest Cakes


Anbu Communications

Thoothukudi Business Directory