» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் 14,18,245 வாக்காளர்கள்: இறுதி பட்டியலை ஆட்சியர் வெளியிட்டார்

வெள்ளி 14, பிப்ரவரி 2020 3:35:33 PM (IST)தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி இன்று (14.02.2020) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி, கலந்து கொண்டு, அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அதன் பின்னர், அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் ஆட்சியர் பேசியதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. ஏற்கனவே, 23.12.2019 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 14,18,245 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர். 

பின்னர் நடைபெற்ற சிறப்பு முகாமில் படிவம் 6, 7, 8, 8 ஏ ஆகிய விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டு கள ஆய்வு மேற்கொண்டதின் அடிப்படையில் 33,438 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 994 வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் விளாத்திக்குளம் சட்டமன்ற தொகுதியில் 1,04,715 ஆண் வாக்காளர்களும், 1,08,390 பெண் வாக்காளர்களும், இதர 2 வாக்காளர்கள் என 2,13,107 வாக்காளர்களும், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் 1,36,839 ஆண் வாக்காளர்களும், 1,42,493 பெண் வாக்காளர்களும், இதர 52 வாக்காளர்கள் என 2,79,384 வாக்காளர்களும், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் 1,15,631 ஆண் வாக்காளர்களும், 1,22,358 பெண் வாக்காளர்களும், இதர 17 வாக்காளர்கள் என 2,38,006 வாக்காளர்களும் உள்ளனர். 

திருவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் 1,07,641 ஆண் வாக்காளர்களும், 1,10,278 பெண் வாக்காளர்களும், இதர 6 வாக்காளர்கள் என 2,17,925 வாக்காளர்களும், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் 1,18,912 ஆண் வாக்காளர்களும், 1,23,524 பெண் வாக்காளர்களும், இதர 24 வாக்காளர்கள் என 2,42,460 வாக்காளர்களும், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் 1,27,334 ஆண் வாக்காளர்களும், 1,32,444 பெண் வாக்காளர்களும், இதர 29 வாக்காளர்கள் என 2,59,807 வாக்காளர்களும் என தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 7,11,072 ஆண் வாக்காளர்களும், 7,39,487 பெண் வாக்காளர்களும், இதர 130 வாக்காளர்கள் என மொத்தம் 14,50,689 வாக்காளர்கள் உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணு சந்திரன், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் காலோன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, தேர்தல் வட்டாட்சியர் நம்பிராஜர் மற்றும் பல்வேறு அங்கீகரிக்கப்பட்ட கட்சி சார்பில் சந்தனம், அக்னல், ரவி, முரளிதரன், முத்துமணி, சிவராமன், வரதராஜ், ஞானசேகர், மாடசாமி ஆகிய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Anbu Communications
Black Forest CakesThoothukudi Business Directory