» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஒருங்கிணைந்த சேவை மைய கட்டடம் கட்டும் பணி : தூத்துக்குடி ஆட்சியர் அடிக்கல் நாட்டினார்

வெள்ளி 14, பிப்ரவரி 2020 12:34:27 PM (IST)தூத்துக்குடி அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த சேவை மையம் கட்டடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. 

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் தூத்துக்குடி அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த சேவை மையம் கட்டடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா அரசு செவிலியர் பள்ளியில் நடைபெற்றது.விழாவில் தூத்துக்குடி ஆட்சியர் சந்திப்நந்தூரி அடிக்கல் நாட்டி பணிகளை துவங்கி  வைத்தார். சமூகநலத்துறை மூலம் நடைபெறும், இந்த பணி ரூ. 48 லட்சம் மதிப்பில் நடைபெறுகிறது. தரைதளம் மற்றும் முதல்தளம் உள்ள கட்டிடம் மொத்தம் 214.30 சமீ பரப்பளவு கொண்டது. 

நிகழ்ச்சியில் தூத்துக்குடி அரசு மருத்துவக்ல்லுாரி முதல்வர் (பொ) டாக்டர் பாவலன், உறைவிட மருத்துவர் டாக்டர் ஜெயபாண்டியன், சமூக நலத்துறை அலுவலர் தனலட்சுமி, சேவை மைய நிர்வாக அதிகாரி, ஷெலின், பொதுப்பணித்துறை உதவி செயற்பாெறியாளர் வெள்ளச்சாமி ராஜ், உதவி பாெறியாளர் அன்புராஜ், மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes


Thalir Products


Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory