» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோடி அற்புதர் புனித அந்தோணியார் கெபி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வெள்ளி 14, பிப்ரவரி 2020 8:11:59 AM (IST)தூத்துக்குடி பூபாலராயர்புரம் கோடி அற்புதர் புனித அந்தோணியார் கெபி திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

தூத்துக்குடி பூபாலராயர்புரத்தில் உள்ள புனித சூசையப்பர் ஆலய பங்கு கோடி அற்புதர் புனித அந்தோணியார் கெபி 39 ஆம் ஆண்டு திருவிழா, புனித சூசையப்பர் ஆலய உதவி பங்குத்தந்தை ஜேசுராஜ் தலைமையில் நேற்று மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. இத்திருவிழாவில் வருகிற 25-ஆம் தேதி காலை 11.30 மணியளவில் அசன விருந்து நடக்கிறது. அன்று இரவு 7.30 மணிக்கு திருவிழா கூட்டு திருப்பலி, இரவு 8 மணிக்கு இன்னிசை கச்சேரி நடைபெறும். இரவு 9 மணிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Anbu Communications
Thoothukudi Business Directory