» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விவாகரத்து பெறாமல் 2வது திருமணம் செய்ய முயற்சி : கணவர் மீது வழக்குப் பதிவு

வியாழன் 13, பிப்ரவரி 2020 12:07:46 PM (IST)

தூத்துக்குடியில் முறையாக விவாகரத்து பெறாமல் 2வது திருமணம் செய்ய முயன்ற கணவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை, ஹோலி கிராஸ் நகரைச் சேர்ந்தவர் முருகானந்தம் (53), இவருக்கும் நெல்லை கேடிசி நகரைச் சேர்ந்த சாந்தி (52) என்பவருக்கும் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். 

இவர்களது விவாகரத்து வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் முருகானந்தம் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, அவரை 2வது திருமணம் செய்ய முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சாந்தி புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Friends Track CALL TAXI & CAB (P) LTD

Black Forest Cakes

Anbu Communications




Thoothukudi Business Directory