» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஒருதலைக் காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை : தூத்துக்குடியில் பரிதாபம்

வியாழன் 13, பிப்ரவரி 2020 11:52:56 AM (IST)

தூத்துக்குடியில் ஒருதலைக் காதல் தோல்வியில் முடிந்ததால் வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி முத்தையாபுரம், எம். தங்கம்மாள் புரத்தைச் சேர்ந்தவர் வேல்சாமி மகன் சக்திகணேஷ் (24), இவர், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். மேலும் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார். ஆனால், பெண் வீட்டார் அவரை திட்டி அனுப்பி விட்டார்களாம். இதனால் சக்திகணேஷ் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று அவர் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Anbu Communications

Thalir Products




Black Forest Cakes




Thoothukudi Business Directory