» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மூடி இல்லாத பாதாள சாக்கடையால் விபத்து அபாயம்: நடவடிக்கை கோரி அமமுக நிர்வாகி நூதன போராட்டம்

வியாழன் 13, பிப்ரவரி 2020 7:53:34 AM (IST)தூத்துக்குடியில் சாலையின் மையப் பகுதியில் பாதாள சாக்கடை குழியில் மூடி இல்லாததை கண்டித்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிா்வாகி நேற்று நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நீண்ட காலமாக நடைபெற்று வரும் நிலையில், ஆங்காங்கே சில இடங்களில் மூடிகள் உடைந்து சரி செய்யப்படாமல் உள்ளன. இதுதவிர, மழைநீா் வடிகால் அமைக்கும் பணிக்காக ஆங்காங்கே தோண்டப்பட்ட குழிகளும் அவ்வாறே காட்சியளிக்கிறது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் சூழல் உள்ளது.

இதற்கிடையே, பூ மாா்க்கெட் செல்லும் சாலையில் உள்ள பாதாள சாக்கடை குழியில் மூடி இல்லாத நிலையை சரிசெய்ய வலியுறுத்தி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 30ஆவது வட்டச் செயலா் காசிலிங்கம் குழியின் அருகே தலைகீழாக நின்றபடி நேற்று நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டாா். இதையடுத்து, அவரிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா், மாநகராட்சி நிா்வாகத்திடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து அவா் போராட்டத்தை கைவிட்டாா்.


மக்கள் கருத்து

தமிழ்ச்செல்வன்Feb 13, 2020 - 09:52:39 AM | Posted IP 108.1*****

நியூ காலனி மெயின் ரோட்டிலும் ஒரு மூடி பல மாதங்களாக போடாமல் திறந்து கிடக்கிறது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thalir Products

Anbu Communications


Black Forest Cakes
Friends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory