» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பிரகாசியம்மாள் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

சனி 18, ஜனவரி 2020 8:23:24 PM (IST)தூத்துக்குடி சாத்தான்குளம் அருகே உள்ள பிரகாசபுரம் பிரகாசியம்மாள் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன்  தொடங்கியது. 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பிரகாசபுரம் பிரகாசியம்மாள் ஆலய திருவிழா  கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல்நாள் காலை 8மணிக்கு திருப்பலி, ஜெபமாலை, சொக்கன்குடியிருப்பு பங்குதந்தை லியோன் தலைமையில் கொடியேற்றம் நடைபெற்றது. நாங்குனேரி அருள்தந்தை அந்தோணிராஜா மறையுரை வழங்கினார்.  மாலை 6 மணிக்கு  ஜெபமாலை. மறையுரை, நற்கருணை ஆசீர் நடைபெற்றது. மேலும் 8ம் நாளான 24ம்தேதி வரை திருப்பலி, மறையுரை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 

9ம் நாளான 25ஆம்தேதி மாலை 6மணிக்கு அருள்தந்தைகள் தூத்துக்குடி நாபார்ட், வள்ளியூர் சகாயஸ்டீபன், தோப்புவிளை செல்வரத்தினம் ஆகியோர் தலைமையில் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை பவனி நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு அன்னையின் சப்பரபவனி நடைபெறுகிறது. 10ம்நாளான 26ஆம்தேதி காலை 6.30 மணிக்கு அருள்தந்தைகள் வள்ளியூர் சகாய ஸ்டீபன், நான்குனேரி அந்தோணி ராஜா தலைமையில் ஜெபமாலை, திருவிழா கூட்டுத்திருப்பலி நடைபெறுகிறது. 

10மணிக்கு ஞானஸ்தானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிறைவு  நாளான 27ம்தேதி 7.30மணிக்கு ஜெபமாலை, நன்றித்திருப்பலி, 2மணிக்கு பொது அசன விருந்து, இரவு 9மணிக்கு ஞானசவுந்திரி  பக்தி நாடகம், கொடியிறக்கம் ஆகியவை நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பங்குதந்தை சலேட் ஜெரால்டு தலைமையில் பங்கு மக்கள் செய்து வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest CakesAnbu CommunicationsThoothukudi Business Directory