» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தட்டார்மடம் பகுதியில் அதிமுக கொடியேற்று விழா

சனி 18, ஜனவரி 2020 8:04:55 PM (IST)சாத்தான்குளம் ஒன்றியம் தட்டார்மடம் பகுதியில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி அதிமுக கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. 

சாத்தான்குளம் ஒன்றியம் அரசூர் ஊராட்சிக்குள்பட்ட இடைச்சிவிளை ரத்தினபுரியில் எம்ஜிஆர் பிறந்த நாள்  கொண்டாடப்பட்டது. விழாவுக்கு சாத்தான்குளம் ஒன்றியக்குழு துணைத் தலைவர் அப்பாத்துரை தலைமை வகித்து  அதிமுக கொடியேற்றி இனிப்பு வழங்கினார். ஒன்றிய இளைஞரணி செயலர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் இதில் கிளை செயலர்கள் அதிரம் பாண்டி, முருகன், அழகேசன், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

தட்டார்மடத்தில் நடைபெற்ற எம்ஜிஆர்  103 வது பிறந்த நாள் விழாவுக்கு  சாத்தான்குளம் ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணி செயலர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். தொழிலதிபர் திருமணவேல், சாத்தான்குளம் ஒன்றிய குழு துணை தலைவர் அப்பாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் எம்ஜிஆர் உருவபடத்துக்கு மாலையணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. விழாவில் கிளை செயலர்கள் செல்வன், சந்தர்ராஜ், பூல்பாண்டி,முருகன்,வேலாயுதம், முருகன்,தாமோதரன், கணேசன், மகராஜன் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.

முதலூரில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவுக்கு முதலூர் ஊராட்சித் தலைவர் பொன்முருகேசன்  தலைமை வகித்து அதிமுக கொடியேற்றி இனிப்பு வழங்கினார். இதில் ஒன்றிய அவைத் தலைவர் பரமசிவபாண்டியன்  ஒன்றிய ஜெயலலிதா பேரவை தலைவர் சின்னத்துரை, ஒன்றியக்குழு உறுப்பினர் மீனாமுருகேசன், ஊராட்சித் துணைத் தலைவர் சுபாஷ், ஊராட்சி அதிமுக செயலர் தங்கராஜ், கட்சி நிர்வாகிகள் செல்வராஜ்,கென்னடி, மார்ட்டீன், பிச்சமுத்து, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

ஆட்டோவில் ஆடு திருட முயன்றவர்கள் கைது

ஞாயிறு 16, பிப்ரவரி 2020 11:41:54 AM (IST)

Sponsored Ads


Anbu Communications


Thoothukudi Business Directory