» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மோட்டார்பைக் - பேருந்து மோதி விபத்து, ஒருவர் பலி : பேருந்து கண்ணாடிகள் உடைப்பு

சனி 18, ஜனவரி 2020 6:00:10 PM (IST)

தூத்துக்குடியில் மோட்டார் பைக் மீது பேருந்து மோதிய விபத்தில் வேலைக்கு சென்று விட்டு திரும்பியவர் உயிரிழந்தார். மேலும் பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி காமராஜ் நகரை சேர்ந்த வேல்முருகன் என்பவரது மகன் கருப்பசாமி (47). கூலித்தொழிலாளி. இவருக்கு வள்ளி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். இன்று மதியம் 3 மணி அளவில் வேலை முடிந்து பைக்கில் தனது வீட்டிற்கு கருப்பசாமி வந்து கொண்டிருந்தாராம். அப்போது தூத்துக்குடி திருச்செந்தூர் ரோட்டில் பெண்கள் கல்லூரி அருகே காமராஜ் நகருக்கு திரும்பும் போது மணப்பாட்டில் இருந்து தூத்துக்குடிக்கு வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து இவரது பைக் மீது மோதியதில் கருப்பசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த விபத்து குறித்து அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த சிலர் விபத்து ஏற்படுத்திய தனியார் பேருந்து மீது  கல்லெறிந்தால் பேருந்து கண்ணாடி உடைந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைப் பார்த்ததும் தனியார் பேருந்து ஓட்டுனர் தப்பி ஓடிவிட்டார். மேலும் பேருந்து பயணிகள் அலறியடித்து ஓடினர். இது குறித்த தகவல் கிடைத்ததும் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த கருப்பசாமி உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது .


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

சேகர தலைவரை தாக்கிய முன்னாள் ஊழியர் கைது

புதன் 30, செப்டம்பர் 2020 11:02:19 AM (IST)

Sponsored Ads

Anbu Communications


Black Forest CakesThoothukudi Business Directory